செங்கோட்டை தாலுகா பறிபோனகதை

மூன்றாம் பேருரை 1956 - ஜுலைத் திங்கள் 26 –ம் தேதி திரு. நேசமணி :
இந்திய அரசியல் தேசப்படத்தைத் திருத்தி அமைப்பதில் கூட்டுக் குழுவினர் சிறப்பு மிக்க பணியாற்றியுள்ளனர். ஆனால் எனது குற்றச்சாட்டுகள் யாதைனில், இவர்கள் ஏனைய மாநிலங்களின் எல்லைக்கோடுகளைத் திருத்தியமைக்கும் தருணங்களில் ஒரே சீரான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதேயாகும். குறிப்பிட்டுக் கூறுவதாயின், செங்கோட்டைத் தாலுகாவைக் குறித்து சிலவற்றை நான் கூறித்தான் ஆக வேண்டும். திருவிதாங்கூர் - கொச்சியைச் சார்ந்த இத்தாலுகாவைச் சென்னை மாநிலத்துடன் இணைத்து விடலாமைன்று பரிந்துரைக்கப்பட்டுள்து.
திருவிதாங்கூர் - கொச்சியைச் சார்ந்த தமிழ்த் தாலுகாக்களின் தலைவிதியை நிர்ணயம் செய்கின்ற கூட்டுக் குழுவில், அப்பிரதேசங்களைச் சார்ந்த எவரையும் பிரதிநிதியாகச் சேர்த்துக் ககாள்ளாமல், ஒரு தலைபட்சமாக முடிவெடுத்திருப்பது துரதிஷ்டமானதே. எங்களுடன் கலந்து ஆலோசிக்காமலும், எங்களது அறிவுக்குக் கொண்டு வராமலும், திருவிதாங்கூர் - கொச்சி மாநிலம் மற்றும் சென்னை மாநிலங்களுக்கிடையே தன்னிச்சையாகச் செய்து கொண்ட ஒப்பந்தம் எங்கள் தலையின் மேல் கைவைப்பது போன்றதாகிவிட்டது. தவிரவும் கூட்டுக் குழுவினரால் இப்பெருமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள அனேகக் காரியங்களை இங்கே விவாதித்து முடிவு எடுப்பதற்கு முன்னதாகவே அவைகள் யாவும் முடித்துக் கொள்ளப்பட்ட முடிவுகளாகவே காட்சி தருகின்றன.
தென் மாநிலம் (தக்காணப் பிரதேசம்) என்ற தனது கொள்கைக்கு நேர்ந்த கருத்து வேற்றுமைகளாலும், தமிழ்ப் பகுதிகளான தேவிகுளம்-பீர்மேடு பகுதிகள் தங்களுக்கு இல்லை என ஜனவரித் திங்கள் 16-ம் நாள் நடுவண் அரசு அறிவித்து விட்டதாலும் ஏமாற்றமடைந்த சென்னை மாநிலம் அதன்முன் வைக்கப்பட்ட இதர பிரச்சனைகளின் பால் எத்தகைய அக்கரையுமின்றிச் செயல்பட்டு, அவைகள் அனைத்திற்கும் “ஆமாசாமி”” - போட்டு விட்டனர். “செங்கோட்டைத் தாலுகா, சென்னை மாநிலத் திருநெல்வேலி மாவட்டத்தின் பாகங்களால் சூழப்பட்டிருப்பதாலும் மக்கள் தொகையில் 93 விழுக்காட்டினர் ,தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாக இருப்பதாலும், அதன் நில இயல்புகளாலும், பிறசார்பு நிலைகளாலும் முற்றிலுமாகத் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்து நிற்கின்றபடியால் அத்தாலுகா திருநல்வேலியுடன் இப்பொழுது இணைக்கப்படவேண்டும்””. என மாநிலங்கள் புனரமைப்புக் குழு பரிந்துரைத்துள்ளது.
 
“நில இயல்புகளாலும், பிற சார்பு நிலைகளாலும் அது திருநல்வேலிக்கு உடமைப்பட்டது” என்ற சொற்றொடரை இங்கே கோடிட்டு காட்ட விரும்புகிறேன். தமிழ் பிரதேசங்களான தேவிகுளம்-பீர்மேடு பகுதிகள் மதுரை மாவட்டத்துடன் இணைக்கப்பட வேண்டிய உரிமையினை மறுத்து நடுவண் அரசு ஜனவரித் திங்கள் 16-ம் நாள் பிரகடனம் வெளியிட்ட உடனே அரசியல் கட்சிகள் தங்களது வேறுபாடுகளைக் கருதாமல் தமிழ்நாடு முழுவதும் நடந்த எழுச்சி ஆர்ப்பாட்டங்களைலயல்லாம் “முட்டாள் தனமானது” என்று
அவ்வேளையில் கூறப்பட்டது. ஆனால் இச்சொல்லானது தமிழ் மக்களின் மேல் கூறப்பட்ட இழிச்சசால் என்ற உண்மையை நாம் மறைப்பதற்கில்லை. தவிரவும், மாநிலத்திற்கு மாநிலம், எல்கைக்கு எல்லைகளில், மாநிலங்கள் புனரமைப்புக் குழுவினரது செயல்பாடுகள் மாறுபட்டு நிற்பதால் நாங்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். “மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்கு பாகம் வரை வியாபித்துக் கிடக்கின்ற செங்கோட்டைத் தாலுகாவின் மேற்கு பாகங்கள்” என்ற சொற்றொடரே ஜனவரித் திங்கள் 16-ம் நாள் வெளியான அரசு அறிவிப்பில் எடுத்தாளப்பட்டுள்ளது. பின்னர் இச்சபையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட முன்மாழிவில் அசசொற்வறாடர்கள் மாற்றப்பட்டு “புளியறை மலைப்பகுதி" என்று சொல்லப்பட்டூள்ளது. இந்த மசோதா, கூட்டுக் குழுவின் பரிசீலனைக்குச் சென்ற வேளையில், இப்பகுதிகளைக் குறித்த நில இயல் உட்கூறுகளைக் குறித்து நன்கு தெரிந்தவர்கள் எவரும் அக்குழுவில் அங்கத்தினராக இல்லை. இதுவும்
நல்லதனக் கருதிய கூட்டுக் குழுவினர் “புளியறை நீங்கலானப் பகுதி” என்பதை அதில் சேர்த்துக் கொண்டனர். இந்த நீக்க நடவடிக்கை ஜுலைத் திங்கள் 2-ம் நாள் நடந்துள்ளது.
 
கூட்டுக் குழுவினரின் அறிக்கையில் நான்காவது பக்த்தில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. “ஜூலை முதலாம் நாள் திருவிதாங்கூர் - கொச்சி அரசு தண்ணீர் வடிவுப் பிரதேசம் உட்பட தனது நாட்டுப் பாகங்களில் சிலவற்றைத் தொட்டடுத்த தாலுகாவுடன் இணைத்துக் கொண்டனர்”” என்றது. இதனால் திருக்கொச்சி அரசு, கூட்டுக் குழுவினரால் ஆய்ந்தறிந்து பிறப்பித்த ஒரு காரியத்திற்கு உலைவைத்து விட்டது. இதற்குச் சென்னை அரசும் தனது ஒப்புதலைத் தந்து விட்டது. இத்தகையச் செயல்கள் எல்லாம் யாருடையத் தூண்டுதலின் பேரில் நடந்துள்ளது என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. யாரோ ஒருவரின் மூளைக்குதற்கத்தால் இந்த “நீர்வடிக்கோட்டு முகட்டூக் கோடு” என்ற கற்பனைக் கோடூ உதயமாகியிருத்தல் வேண்டும். ஆனால் நில நேர்கோட்டுப் பாதையும், நில நிலைக் கோட்டுப் பாதையும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லைலயன்பதால் அதற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இத்தகைய கற்பனைக் கோடான “நீர்வடிமுகட்டுக் கோடு” எங்கேயிருக்கிறது? மலைத்தொடர்களைக் கொண்ட காட்டுப் பகுதியை இது குறிக்கிறதா? இந்த கோடு எங்கேயிருக்கிறது என்பதை யாரும் அறியார். எந்தெந்த பகுதிகள் எல்லாம் அவ்வாறு மாற்றப்பட்டுள்ளன என்பதையும் யாரும் அறியார். இவைகளை விடுத்து, இத்தாலுகாவின் ஒரு பகுதி அண்டைத் தாலுகாவுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே அந்த அரசு குறிப்பு கூறுகிறது. ஜுலைத் திங்கள் இரண்டாம் நாள். அன்றுதான் புனரமைப்புக் குழு தனது ஆய்வுக்காக அமர்ந்து உள்ளது. இத்தகைய அழிப்பு செயல்களைத் துணிந்து செய்தவர்கள் நடுவண் அரசாக இருப்பினும்சரி, திருவிதாங்கூர்-கொச்சி அரசாக இருப்பினும் சரி, அவைகள் அனைத்தும் இவ்வவையின் உரிமையினை மீறியச் செயல்களாகும். இப்பிரச்சினை கூட்டுக் குழுவின் கவனத்திற்கு வந்த தருணத்தில் சென்னை அரசும், திருவிதாங்கூர் அரசும் தங்களிடையே ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு விட்டுக் கொடுத்த செயலே இது. குற்றவாளிகள் யாராக இருப்பினும் இச்செய்கை உயர்நீதிமன்றமாகிய இந்நாடாளுமன்றத்தை இழிவுபடுத்தி அதன் உரிமையை மீறியச் செயல் என்றே நான் துணிந்து கூறிக் கொள்வேன். இத்தகைய உரிமை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற தீர்மானத்தை நான் முன்மொழிந்திடும் அதே வேளையில், நாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் இத்தகையச் செயல்கள் எல்லாம் இம்மாமன்றத்தின் உரிமையை மீறுகின்ற செயலாகிறது. தவிரவும் நாட்டின் உயர்நீதிமன்றமாகிய பாராளுமன்றத்தை இழிவுபடுத்திய செயலுமாகிறது. தவிரவும் இதனால் மக்களின் உரிமைகளையயல்லாம் பண்டமாற்றம் செய்து விட்டது போன்றாகிவிட்டது. இதற்கு மக்கள் என்ன தவறு செய்தனர் என்பதை அறிய விரும்புகிறேன். தமிழ்ப் பகுதிகள் அனைத்தும் சென்னை மாநிலத்துடன் இணைய. வேண்டுமென்றே அவர்கள் கோரினர். சார்பு நிலைகளிலும். நில அமைப்பு நிலைகளிலும் இப்பகுதிகள் திருநல்வேலி மாவட்டத்தால் சூழப்பட்டுள்ளது என்று மாநிலங்கள் புனரமைப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது. நீர் வடிவு முகட்டுக்கோடு எங்குள்ளது? செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரம் செல்லுகின்ற இருப்புப்பாதை இவ்விடத்தினுடே ஊடுருவிச் செல்கிறது. ஆங்காங்கே மலைகள் விடுபட்டு நிற்கிறது. ஆனால் நீர் வடிவு முகட்கோடு எங்கிருக்கிறது? என்று தெரியவில்லை. மக்கள் எசல்ல முடியாத அளவிற்கு இப்பகுதிகள் அடர்த்தியான காடுகளால் நிறைந்தவைகளும் அல்ல. பல்வேறு சாலைகள் வாயிலாக இப்பிரதேசத்தை அடைவதற்கு முடியும். அத்தகையச் சாலைகளில் பெரும்பாலும் எசங்கோட்டை பக்கத்திலிருந்து செல்லுகிறதே தவிர, திருவிதாங்கூர் பக்கத்திலிருந்து எவையும் செல்லவில்லை. அவ்வாறிருக்கும்போது நீர்வடிவு முகட்டுக்கோடு என்பதன் பொருள் தான் என்ன? அவர்கள் கூறுகிறார்கள் நீர்வடிவு முகட்டுக்கோட என்று. அங்கே ஓர் ஆறு ஓடுகிறது, அதுவும் வேரறாரு ஆற்றின் கிளையாக ஓடுகிறது. அவ்விடத்திலுள்ள அனேகக் குன்றிலிருந்து தான் அது உற்பத்தியாகிறது. அது அச்சன்கோவில் ஆறு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆறு செங்கோட்டை தாலுகாவையும், கொல்லம் மாவட்டத்தையும் வேறுபடுத்துகின்ற எல்லைக் கோடாக அமைந்துள்ளது. இதுவே இன்றைய தண்ணீர் வடிமுகட்டூக் கோடாகக் கருதப்படுகிறது. இதைத் தவிர இன்எனாரு பெரிய நீரோடையும் அங்கே கீழ்நோக்கி ஓடிப் பிறிதாரு ஆற்றில் இணைகிறது. இதையும் நீர்வடி முகட்டுக்கோடாகக் கருதலாமே? இத்தகைய இருமலைகள் மற்றும் ஓடைகளுக்காக நீர்வடி முகட்டுக்கோடு தத்துவத்தைக் காண்டு வருவது விரும்பத்தகாததும், தேவையற்றதும் நியாயமானதும் அல்ல, இத்தவறு சரி செய்யப்பட வேண்டியதாகும். நடுவண் அரசின் உள்துறை இலாகா நீதிகாத்து இதை மறு பரிசீலனை செய்யும் என நம்புகிறேன். இத்தகைய நியதியற்ற செயல்களினால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எசங்கோட்டை வாழ் மக்களின் பொருளாதாரமும் இம்மலைகளைச் சார்ந்தே அமைந்திருக்கிறது. அவர்களின் விவசாயத்துக்குத் தேவையான பசுந்தாள் உரங்கள் இம்மலைகளிலிருந்து தான் கிடைத்து வருகிறது..அவர்களின் மேய்ச்சல் தலங்களும் இம்மலைகளில் தான் பரந்து கிடக்கின்றன. அவர்களின் உழவுத் தொழிலுக்கான உபகரணங்களும் இங்கிருந்து தான் செய்யப்படுகின்றன. அவர்களுக்குத் தேவையான எரி பொருளான விறகும் இம்மலைகளிலிருந்து தான் கிடைக்கின்றது. இத்தகைய முகட்டுக்கோட்டு பாகுபாட்டால் அவர்களது உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படுகின்றன. தவிரவும் அவர்களை அவர்களது நாட்டைவிட்டு வெளியேறவும் சொல்லுகிறார்கள். இத்தகைய செயல்கள் அனைத்தும் நேர்மையில்லாத செயல்களாகும் எனக்கூறுவேன். எனவே இது மறு பரிசீலனைச் செய்யப்பட வேண்டியதாகும்.
 
நடுவண் அரசின் தூண்டுதலால் மட்டுமே இவ்விரு அரசுகளும், நீர்வடி முகட்டுக்கோடுகளைத் தங்களது எல்லைக் கோடுகளாக ஏற்றுள்ளனர். ஆனால் தேவிகுளமும், பீர்மேடும் எங்களுக்கு மறுக்கப்பட்ட தருணத்தில், அங்கே ஏன் இந்த “முகட்டுக்கோடு நீர்வடி” தத்துவத்தைக் கடைபிடிக்கவில்லை என மிகவும் கனிவுடன் கேட்கிறேன். நேரான கோடூகளால் தான் எல்கைகளை அமைக்க வேண்டூம் என்பது இக்குழுவின் தத்துவம் என்றாலும், மதுரை மற்றும் கோயம்பத்தூர் மாவட்டங்களின் எல்கைகளை நேராக்குவதற்காகத் தேவிகுளம் - பீர்மேடு தாலுகாக்களை எங்களுக்குத் தந்திருக்க வேண்டுமே? அவைகள் திரு-கொச்சியின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவையானது என்றால், விலங்குகள் சரணாலயமாக மட்டும் உள்ள பெரியாறு நீர்தேக்க பள்ளத்தாக்கினை மட்டுமாவது ஏன் சென்னை மாநிலத்துடன் இணைக்கக் கூடாது? பரம்பிக்குளம் நீர்த் தேக்கத்தைக் குறித்த தகராறுகளை நடூவண் அரசு முழுவதுமாக அறிந்திருக்கிறது. இதன் நீர்ப் பிடிப்புப் பகுதிகள் அனைத்தும் சென்னை மாநில வரம்பிற்குள் இருக்கிறது. அதுபோன்ற பல அணைகளில் ஒன்று மட்டூமே திருவிதாங்கூர் - கொச்சி வரம்பிற்குள் வருகிறது. இருப்பினும், திரு-கொச்சியைச் சார்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும், குறிப்பாகப் பொதுவுடமைக் கட்சியினர், பி.எஸ்.பி.கட்சியினர், கே.எஸ்.பி.கட்சியினர், ஆர்.எஸ்.பி.கட்சியினர் போன்ற அனைத்தும் சென்னை அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து நின்று குரல் கொடுக்கின்றனரே. இத்திட்ட முன்னோடி ஆய்வுகளுக்காக, அவர்களின் எல்கை வழியாகக் கடந்துச் செல்வதற்கு எங்களை அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் கூறிவருகிறார்கள். இதுவே திருவிதாங்கூர் - கொச்சி மாநிலத்தின் மனநிலை எனக் காணப்படுகிறது. தத்துவங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, செங்கோட்டையைப் பொறுத்த வரையிலும் நீர்வடி முகட்டுக்கோடு தான் அதன் எல்கையெனக் கூறுகின்ற கூட்டுக்குழு, தேவிகுளம்-பீருமேட்டைப் பொறுத்த மட்டும் அவ்வாறு நீர்வடிமுகட்டுக்கோடு தத்துவத்தைலயல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அப்பகுதிகளை முழுவதுமாகத் திருவிதாங்கூர்-காச்சி மாநிலத்திற்குத் தரப்பட வேண்டும் என கூறுகிறது. இத்தகைய முடிவில் எத்தகைய ஞானமும் அடங்கி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
அதன் நான்காவது சரத்திலும் பெரும் பாதகம் ஒன்று மீண்டும் எங்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ளது. நான் குறிப்பிடுவது, மாவட்டங்களை உருவாக்குவதற்கான அதிகாரங்களைத் தத்தம் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதைக் குறித்தாகும். கூர்க் பகுதியைப் பொறுத்தமட்டிலும், அதே போன்று அஜ்மீரைப் பொறுத்த மட்டிலும் அவைகள் தனி மாவட்டங்களாக உருவாக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், 800 சதுர மைல்கள் பரப்பளவு கொண்டதும், 8.5 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டதுமான நான்கு எதன் தாலுகாக்களை, தற்பொழுது பெரும்பரப்பளவைக் கொண்ட திருநல்வேலி மாவட்டத்துடன் இணைத்துவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு, தொலைத்தொடர்பு வசதிகள், மருத்துவ சேவைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நிர்வாக வசதிக்காக இந்த நான்கு தாலுகாக்களையும் உள்ளடக்கிய ஒரு தனி மாவட்டமாக ஏன் இதை உருவாக்க முடியாது என்பதைக் குறித்து யாரும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. உண்மை நிலையினை அவர்கள் உணர்ந்திராத நிலையாலேயே அதைக் குறித்து ஆராய்வதற்கு எவரும் அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு மாநிலத்திற்கும் மற்வறாரு மாநிலத்திற்குமிடையே ஓரவஞ்சனையுடைய வேறுபாடுகளை இவ்வறிக்கையின் அனைத்துப் பக்கங்களிலும் காண முடிகிறது. ஒரு பொது நியதியைக் கடைபிடிக்கும் தருவாயில் அந்நியதியை ஏற்றுக்கொண்டு அணுகளவும் பிசகாமல், அனைத்து மாநிலங்களிலும் அதைக் கடைபிடித்தல் வேண்டும். ஆனால் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகின்ற போக்கு அங்கே கையாளக் கூடாது.
சிறுபான்மையினரைப் பொறுத்தமட்டிலும் திரு.பிராங் அந்தோனி அவர்கள் கூறிய கருத்துக்களை முழுமையாக நானும் ஆதரிக்கிறேன். தற்போது மாநிலங்கள் புனரமைப்பு ஒழுங்குகளின் அடிப்படையில் எங்களது பகுதிகள் சென்னை மாநிலத்துடன் இணைகிறது. ஆயினும் பத்து லட்சங்களுக்கும் அதிகமான தமிழர்கள் திருவிதாங்கூர் - கொச்சி நாட்டில் இன்னும் விடப்பட்டிருக்கின்றனர். 
 
திரு.அச்சுதன் கங்கனர்
அப்படியானால் நான்கு தாலுக்களிலுமுள்ள மலையாளிகளின் நிலைகள் தான் என்ன?
 
திரு.நேசமணி
அவசரப்பட வேண்டாம். நான் அதற்கும் வருகிறேன். உங்களது உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும். எவைகளையல்லாம் அங்கே எங்களுக்கு வேண்டுமைன்று கோருகின்றோமோ, அவைகள் அனைத்தும் மலையாளிகளுக்கும் தரப்படும் என்பதைக் கூறிக் எகாள்வேன். எங்களது பிள்ளைகளுக்கு அவர்களது தாய்மொழியான தமிழில் கல்வி கற்பதற்கு மலையாள அரசு இணக்கம் தரவில்லை என்ற கசப்பான அனுபவங்கள் எங்களுக்கு உண்டு. அதன் பின்விளைவு தமிழைத் தாய் எமாழியாகக் கொண்ட தமிழர்கள் அனைவரும் மலையாளிகளாக்கப்பட்டனர். அதற்கு எதிராகவும் நாங்கள் போராடினோம். அதன் பயனாகக் கடந்த நாலாண்டூ காலங்களாக மலையாள மொழியைக் கற்றுக் கொடுத்து வந்த பள்ளிகள் அனைத்தும் தமிழ் பள்ளிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. தமிழ் மொழியைக் கற்பதற்கு வழிவகைகள் செய்யப்படாமையால், ஒரு காலத்தில் தமிழர்கள் அனைவரையும் மலையாள மொழியைக் கற்பதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர். வழிவகைகள் செய்யப்பட்ட உடனே தங்களது தாய்மாழியைக் கற்கத் தொடங்கியது போன்று, திரு.பிராங்கு அந்தோனி கூறியது போன்று அனைவரும் தங்களது தாய்மாழியைக் கற்பதற்குத் தேவையான வழி முறைகளை இந்த சட்ட மூன்
வரைவிலும், வழி வகைகள் செய்யப்பட வேண்டும். இப்பாறுப்பை உள்ளூர் ஆளுனரிடமோ அல்லது மண்டலக் குழுவினரிடமோ ஒப்படைத்து விடக் கூடாது. சிறுபான்மையினரின் கல்வி மற்றும் கலாச்சாரங்களைப் பொறுத்தமட்டில் அதற்குப் பாதுகாப்பு அளித்திடும் வகையில் இந்த சட்ட முன்எமாழிவிலேயே உகந்த பாதுகாப்புச் சரத்துக்களைக் கட்டாயமாக உள்ளடக்கியதாக அது இருத்தல் வேண்டும்.
தென் தாலுகாக்களின் வழக்குரைஞர்களைலயல்லாம் திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது மாநிலங்கள் புனரமைப்பு முன்மொழிவு சட்டத்தில் ஒரு குறை என்பதால், நான் இது குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு விளக்கி, அத்தகைய சரத்துக்கு ஒரு திருத்த சரத்தை முன்மொழிந்துள்ளேன். அந்த திருத்தப் பிரனையை உள்துறை அமைச்சகம் உரிய கவனத்தில் எடுத்துக் கொள்ளூம் என நான் நம்புகிறேன்.
 
குறிப்பு :
 
இவரது பேரூரைகளை ஆய்ந்து பார்க்கின் அவைகள் அனைத்தும் தமிழகத்தின் வருங்கால நலன்களைக் கருத்தில் ககாண்டு ஆற்றியவைகளாகக் காணலாம். குறிப்பாகத் தேவிகுளம், பீர்மேடு போன்ற தமிழ்ப் பகுதிகளை எவ்வாறேனும் தாய்த் தமிழகத்துடன் இணைத்துவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பல வரலாற்று உண்மைகளையும், இயல்பு நிலைகளையும் முன்வைத்து பேசப்பட்டுள்தே இதற்குச் சான்று, ஆனால் இவருக்குத் தமிழகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உதவிக்கரம் நீட்டவில்லை. அவ்வாறு
அவர்களும் அவையில் திரு.நேசமணிக்கு உதவியாக விவாதத்தில் பங்கேற்றிருப்பின் தேவிகுளம், பீருமேடு மற்றும் nசெங்கோட்டையின் மேற்குப்பாகம் தமிழ்நாட்டிற்குக் கிடைத்திருக்கும் என்பது நிச்சயம்.

Comments

Popular posts from this blog

இந்திய பாராளுமன்றத்தில் திரு.எ.நேசமணியின் பேருரைகள் (1955 டிசம்பர் திங்கள் 14, 15 நாட்கள் மற்றும் ஜுலை திங்கள் 1956) அ.முதற்பேருரை நாள் 14-12-1955 புதன்கிழமை