இந்திய பாராளுமன்றத்தில் திரு.எ.நேசமணியின் பேருரைகள் (1955 டிசம்பர் திங்கள் 14, 15 நாட்கள் மற்றும் ஜுலை திங்கள் 1956) அ.முதற்பேருரை நாள் 14-12-1955 புதன்கிழமை
இந்திய பாராளுமன்றத்தில் திரு.எ.நேசமணியின் பேருரைகள் (1955 டிசம்பர் திங்கள் 14, 15 நாட்கள் மற்றும் ஜுலை திங்கள் 1956) அ.முதற்பேருரை நாள் 14-12-1955 புதன்கிழமை
திரு.எ.நேசமணி:
துணை அவைத் தலைவர் ஐயா அவர்களே, எமது கன்னிப் பேச்சை
இச்சபையில் ஆற்றுவதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துக்
கொள்ளுகிறேன்.
துணை அவைத் தலைவர் (குறுக்கிட்டு) :
மதிப்பிற்குரிய உறுப்பினர் அவர்கள் கன்னியாகவே தொடர
விரும்புகிறாரா?
திரு. நேசமணி
திருவிதாங்கூர் - கொச்சி மாநிலத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நலன் வேண்டி இங்கு ஒலிக்கின்ற ஒரே குரல் எனது குரல் மட்டுமே ஆகும். மாநிலங்கள் புனரமைப்புக் குழுவின் அறிக்கையில் 83-வது பக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடித் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசின் ஒரே பிரதிநிதி நான் ஒருவனேயாகும், தொன்று தொட்டே திருவிதாங்கூர் - கொச்சியில் தமிழ் மக்கள் பெருவாரியாக வாழ்கின்ற ஒன்பது தாலுகாக்களையும் தமிழ் நாட்டுடன் இணைத்திட வேண்டும் என்பதே திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்காள்ளப்பட்ட கொள்கையாகும். அவைகள் முறையே தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றங்கரை, தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை மற்றும் சித்தூர் எனப்படுகின்ற ஒன்பது தாலுகாக்களாகும். மேலே சொல்லப்பட்ட ஒன்பது தாலுகாக்களில் தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை ஆகிய ஐந்து தாலுகாக்களையும் தமிழ்நாட்டுடன் இணைத்து விடலாம் என மேற்படிக் குழு ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது. இவைகளில் விடுபட்டுப்போன நான்கு தாலுகாக்களுடைய கோரிக்கைகள் மட்டுமே இப்போது எஞ்சி நிற்கின்றது. விடுபட்டுப்போன நான்கு தாலுகாக்களைக் குறித்த எங்களது உரிமைக் கோரிக்கைகளை எடுத்துரைப்பதற்கு முன்பு சில குறிப்பு விளக்கங்களை இங்கே எடுத்துரைத்த திரு.தாமஸ் அவர்களுக்குப் பதில் தருவதற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அதை விரைவாக முடித்து விடலாம் எனவும் எண்ணுகிறேன். ஏனைனில் அவரின் குறிப்புரைகள் எல்லாம் அதிகம்
முக்கியத்துவம் தருவதற்குத் தகுதியுடையவைகளாக இல்லை. (குறுக்கீடு)
திரு எ.எம். தாமஸ் (கேரள எம்.பி.க்களைப் பார்த்து)
திரு.நேசமணி அவர்கள் பிரபல வழக்கறிஞர் ஆவார் என்பதை கருத்தில்
கொள்ளுதல் வேண்டும்.
திரு.நேசமணி
திரு-கொச்சி தமிழ்ப் பகுதிகளை அண்டை மாநில மாவட்டமான திருநெல்வேலியுடன் நீங்கள் சற்று ஒத்து நோக்குதல் வேண்டும். நண்பர் அவர்கள் ஆரல்வாய்மாழி முதல் கன்னியாகுமரி வரையில் பயணம் செய்திருப்பாரேயானால், அந்த 30 மைல் தொலைவும் அடர்ந்த மலைப்பகுதிகளால் அடைக்கப்படப்பட்டிருக்கவில்லை என்பதை அவரே கண்டு கொண்டிருப்பார்.
தவிரவும் திரு-கொச்சியில் உயர்நீதிமன்றம் உள்ளதே எனவும் அவர் கூறலாம். காலமெல்லாம் வழக்காடியே நாங்கள் இங்கே வாழ்ந்து கொண்டிருப்பதற்கு விரும்பவில்லை. இந்த நாட்டை விட்டு எங்களை விரட்டுவதற்காக எங்கள் மீது பல கொடுமைகளையெல்லாம் பட்டம் தாணுபிள்ளை கட்டவிழ்த்துவிட்ட வேளையில், இந்தியாவின் உச்சநீதிமன்றம் மட்டுமே எங்களுக்குப் பாதுகாப்பு தந்தது. தவிரவும் மைசூர் உயர் நீதிமன்றமே எங்களுக்கு விடுதலையைத் தந்தது. எனவே திருவிதாங்கூரில் உயர்நீதிமன்றம் எவ்விடத்து இருப்பினும் அதனால் எங்களுக்கு எத்தகைய நன்மையும் பயக்கப்போவது இல்லை என்றே நான் இங்கே கூறுவேன். அதனாலேயே உரிமை கோரி ஆறு முறைகள் உச்ச நீதிமன்றம் எனது சொந்த ஊரான நாகர்கோவிலில் இருந்தால் என்ன? அல்லது கயிலைமலையில்தான் இருந்தால் என்ன? அனைத்தும் எங்களைப் ஒபாறுத்தவரையில் ஒன்றுதான். எங்களுக்கு எத்தகைய நன்மையையும் செய்திட அதனால் இயலாது என்பது உறுதி. விளைபொருட்களின் உற்பத்தி அடிப்படையில் இவைகள் சிறந்த தாலுகாக்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு நான் கூறுகின்ற பதில் யாதெனில், மாநிலங்கள் சீரமைப்புக் குழுமத்தின் முன்பு அளிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் தெளிவுக் குறிப்புகளின் வாயிலாக இந்த நாலு தாலுகாக்களும், திரு.தாமஸ் அவர்கள் அறியாமையால் கோருவது போன்று, உபரி விளைச்சலைக் கொண்டவைகள் அல்ல என்பது நிரூபணமாகிறது. மக்கள் தொகையில் அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால் நபர் ஒன்றுக்கு வெறும் ஆறு சென்று
நன்செய் நிலம் மட்டுமே இங்குள்ளவர்களுக்குக் கிடைக்கும் என்பதை புனரமைப்புக் குழுவினருடன் நாங்கள் எடுத்துக் கூறியுள்ளோம். இந்த ஆறு சென்று நிலத்தில் கிடைக்கின்ற விளைச்சலை வைத்துக்கொண்டு ஒரு நபர் ஓராண்டு காலம் வாழ முடியுமா? நிச்சயமாக முடியாது இவ்வுண்மையைப் புனரமைப்புக் குழுவினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே நாஞ்சில் நாடு திருவிதாங்கூர் - கொச்சி மாநிலத்தின் நற்களஞ்சியம் எனவும் அவைகள் உபரி உற்பத்தியிடங்கள் எனவும் கூறி வருவதில் எத்தகைய உண்மையுமில்லை என்று குழுவினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அடுத்து எடுத்துரைக்கப்பட்டிருப்பது தாதுமணலைக் குறித்தவையாகும். இத்தாது மணல்வளங்கள் அனைத்தும் நடுவண் அரசுக்குச் சொந்தமானவைகளாகும். தோரியம், மோனோசைபட்டூ, சிர்கான் மற்றும் ஏனைய தாதுக்களும் இங்கு மிகுதியாகக் கிடைக்கிறது என்பது உண்மையயென்றாலும், அவைகளை முற்றிலுமாக உற்பத்திச் செய்வதற்குத்தேவைப்படுகின்ற நுட்பத்திறன் கொண்ட தொழிலாளர்களின் பற்றாக்குறையே மேற்படித் தொழில் நிலையத்தில் காணப்படுகிறது.
தோவாளையில் எங்கள் கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தார் என்பதால் அதைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட வேண்டும் என்ற வாதத்தையும் புனரமைப்புக் குழுவினரிடத்தில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. இக்கருத்தைத் திரு.தாமஸ் அவர்கள் இவ்வவையில் மீண்டும் எடுத்துரைத்துள்ளார். தோவாளைத் தொகுதியில் வெற்றியடைந்த உறுப்பினர் திரு.டி.எஸ்.இராமசுவாமி பிள்ளை பிரஜா சோஷலிஸ்டூ கட்சியைச் சார்ந்தவராவார். அக்கட்சியின் மேல்நிலைத்தலைவர்களான திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணனும், திரு.அசோக் மேத்தாவும் இங்கு வருகை தந்த வேளையில் அவர்களும் இப்பகுதிகள் சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டுமெனக் கூறினார்கள். தமிழ்த் தாலுகாவான இத்தோவாளையும் சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டும்மெனக் கூறினார்கள். தமிழ்த் தாலுகாவான இத்தோவாளையைச் சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் ஆதரிப்பதாகவும், அத்தகைய கொள்கையின் அடிப்படையிலேயே தான் தேர்தலில் போட்டியிட்டதாகவும் அதற்கு ஆதாரங்களாக தனது தேர்தல் பிரகடனம் மற்றும் தனது தேர்தல் பிரச்சார உரைகளின் நகல்களை மாநிலங்கள் புனரமைப்புக் குழுவினருக்குத் திரு.இராமசாமி பிள்ளை அளித்திருக்கிறார்.
தவிரவும், இப்பிரச்சினையைக் குறித்து திரு-கொச்சி சட்டசபையில் விவாதம் எழுந்த வேளையிலும் இந்த ஒன்பது தமிழ்த் தாலுகாக்களும் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்றே அவர் கோரினார். பி.எஸ்.பி. முதலமைச்சரான திரு.பட்டம் தாணுபிள்ளை அரசுக்கு எதிராக முதலில் நம்பிக்கையில்லாத தீர்மானத்தை முன்மொழிந்தவரும் அதே கட்சியைச் சார்ந்த திரு.இராமசாமி பிள்ளையேயாவார். ஏனனில் அவர்களுக்கு அளித்த
வாக்குறுதியைப் பட்டம் தாணுபிள்ளையின் அரசு நிறைவேற்றத் தவறியதாலேயே ஆகும்இவரின் நம்பிக்கையில்லாத் தீர்மானமே பட்டம் தாணுபிள்ளையின் ஆட்சியை வீழ்த்தியது.
துணை அவைத்தலைவர் :
தற்சமயம் அங்கு அரசு மாறியிருப்பதால் அனைத்தும் சுமூகமாக மாறி இருக்குமே?
திரு.நேசமணி :
அவ்வாறில்லை ஐயா, இதற்கான விளக்கத்தை நான் எடுத்துரைக்கவுள்ளேன். இச்சிக்கலான பிரச்சினையின் உண்மை நிலைகளைக்குறித்து நண்பர் திரு.தாமஸ் அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. துப்பாக்கிச் சூடு நடக்கும் அளவிற்கு நாங்கள் எசய்த தவறுதான் என்ன? தேவிகுளம் மக்களுக்கு எதிராக போலீசாரால் அவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள் மற்றும் அட்டூழியங்களில், சிக்கி இருந்த மக்களுக்குப்பாதுகாப்பு தர வேண்டும் எனக் கோரினோம். இதைத் தொடர்ந்து, அன்று முதலமைச்சராக இருந்த திரு.பட்டம் தாணுபிள்ளையிடம் இது குறித்து விவாதிப்பதற்கென்று எங்களது தூதுக்குழு ஒன்று அவரைச் சந்திப்பதற்குச் சென்றது. அத்துடனே நான் செல்லவில்லை. திரு-கொச்சி சட்டமன்ற உறுப்பினர்களாக அன்று இருந்த எனது கட்சியைச் சார்ந்தவர்களே இத்தூதுக் குழுவில் சென்றனர். ‘
முதலமைச்சரைச் சென்று காண்பதற்கு முன்பு, தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்குச் சென்று அங்கு நிலவி வந்த சூழ்நிலைகளைக் குறித்து நேரில் கண்டறிந்த பிறகே முதலமைச்சரை அவர்கள் சந்தித்தனர். ஆனால் பிரதிநிதிகளை அவர் கேவலமாகப் பேசிவிட்டுக் கூறினார். “எனக்கு ஆணை பிறப்பிக்கவா வந்துள்ளீர்கள்?” நாங்கள் வேண்டிக் கொண்டது வேறொன்றுமில்லை. அவ்விடங்களில் அக்கிரமங்களையும் அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு குறிப்பிட்ட காவல்துறை உதவி ஆய்வாளரை அவ்விடம் விட்டூ மாற்றிவிட வேண்டும் என்பதேயாகும். அதற்குப் பட்டம் தாணுபிள்ளை அளித்த பதில் “உங்கள் ஆணைப்படி நான் செயலாற்றப் போவதில்லை” என்பதே. அதற்குப் பிறகே, அதாவது 30-06-1954-லை “தேவிகுளம் தினம்" என அறிவித்து அதன் வாயிலாக மக்களது ஒருமித்த கருத்தை அரசாங்கத்திற்கு எடுத்துக் காட்டிடவும், அதனால் அரசாங்கத்தின் அடக்குமுறைக் கொள்கையைக் கைவிடச் செய்திடவும் மேற்படித் தினம் கடைபிடிக்கப்பட்டது. ஆயினும் அரசின் போக்கில் எத்தகைய மாறுதல்களும் ஏற்படவில்லை. எனவே, ஜுலை 4-ம் நாளன்று தேவிகுளம் தினம் அனுசரிக்கப்பட்டது. எனது இயக்கத்தின் பொறுப்புமிக்க உறுப்பினர்களும், நானும், மாநில மேல்சபை உறுப்பினர் ஒருவரும் மற்றும் முன்னாள் அமைச்சர் ஒருவரும் தேவிகுளம் சென்று எமது மக்களிடம் நிலைமைகளை எடுத்துக்கூறி சாத்வீக சூழ்நிலை ஒன்றை அங்கு உருவாக்குவதற்காக அவ்விடம் எசன்றோம். ஆனால் அங்கே முன்தேதியிட்ட. 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. இதற்கெல்லாம் அஞ்சி ஓடி ஒளிந்து கொள்வதற்கு எங்களது தன்மான உணர்வு இடம் தரவில்லை. எனவே அரசாங்கத்தின் இந்த ஒருதலைபட்சமான கொடுங்கோல் தன்மையுடைய அந்த தடை உத்தரவை மீறுவது, எங்களது கடமையாகிறது எனக் கருதினோம். அங்கே அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து எங்களைத் தொடர்ந்து வந்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. நகர்மன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், வணிக பெருமக்கள் மற்றும் தமிழகம் தழுவிய ஏராளமான பெருங்குடி மக்கள் போன்றோர் வெள்ளமெனத் திரண்டு வந்து எங்களுக்கு நல்லாதரவு அளித்து புடைசூழ்ந்து 'வந்தனர். இந்த அறை கூவலை ஜீரணித்துக் கொள்ள இயலாத பட்டம் தாணுபிள்ளையின் அரசு இதற்குப் பிறகும் தங்களது ஆணவப் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. மாறாக தனது அனைத்து அடக்குமுறை இயந்திரங்களையெல்லாம் மக்கள் மீது ஏவ அவர் தவறவில்லை. நீதியின் ஊற்றுக் கண்கள் அங்கே மலினப்படுத்தப்பட்டன. அனைத்து, அரசுத் துறைகளிலும் பேராதிக்கம் செலுத்துகின்ற மலையாளி அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் நீதித்துறையினர் போன்றோர் அனைவரும் முற்றிலுமாக ஊழல்வாதிகளாகவே அங்கே காணப்பட்டனர்.
திரு.எ.எம்.தாமஸ் :
நீதித்துறையினர் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஊழல்வாதிகள் என்று மதிப்பிற்குரிய உறுப்பினர் கூறுவது உகந்ததுதானா?
திரு.நேசமணி :
திருவிதாங்கூர் - கொச்சி உயர் நீதிமன்றம் ஆறு தாவாக்களின் மீது வழங்கிய தீர்ப்புக்கு எதிராக நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறோம்.
மேன்மைமிக்க துணை அவைத்தலைவர் :
இது சற்று கடுமையான விமர்சனமாகும். பொதுவாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறாகப் பேசுவது வரவேற்கத்தக்கதாக இல்லை. தமிழ் மக்களுக்குத் திரு-கொச்சி உயர்நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லை என்பது போன்ற ஒரு உணர்வை அவர்கள் வளர்த்துள்ளனர் போல் தோன்றுகிறது. இதுவும் அவர்கள் பிரிந்து செல்ல வேண்டும் என்பதற்கான ஒரு காரணமாக அமைந்துள்ளது. நீதிபதிகள் அனைவரும் மதிக்கப்பட வேண்டியவர்களாவர். எனவே அன்னாரது இந்த கடுமொழியானது பொதுப்படையானதாகவும், குறிப்பிட்டு எவரையும் புண்படச் செய்ய வேண்டும் என்பதற்காகப் பேசப்பட்டது அல்ல. பிற பகுதிகளில் உள்ள நீதிபதிகளை விட சற்று வேறுபட்டவர்களாக அவர்கள் உள்ளனர். இதைத் தானே மதிப்பிற்குரிய உறுப்பினர் கருதுகிறார்.
திரு.நேசமணி :
ஆம் ஐயா, அவ்வாறே நான் கருதுகிறேன். இத்தாவாக்களையைல்லாம் திருநெல்வேலியிலுள்ள நீதிமன்றத்துக்கு மாற்றலாமே என உச்ச நீதிமன்றம் திரு-கொச்சி அரசு வழக்கறிஞரிடம் ஆலோசனை கூறியது. இதை ஏற்க மறுத்த அரசு வழக்கறிஞர், திருநெல்வேலியில் மலையாளிகளுக்கும் தமிழர்களுக்குமிடையே பகைமை வளர்ந்துள்ள நிலையில், திரு-கொச்சி அரசுக்கு நீதி சென்னையில் கிடைக்காது என்று கூறினார். எனவே, முடிவாக தாவாக்கள் சென்னையில் இருந்து மைசூருக்கு மாற்றப்பட்டது. அங்கிருந்து
தான் எங்களுக்கு நீதியும், உரிமையும் கிடைத்தன.
திரு.சி.கே.நாயர் :
நீதிபதிகள் ஊழல் புரிபவர்கள் என்பதனாலல்ல, அவர்களின் உணர்வுகள் அத்தகையதாக உயர்ந்து காணப்பட்டது என்பதனால் மட்டுமேயாகும்.
திரு. நேசமணி :
அதனாலேயே நான் அவர்களை நீதியற்றவர்கள் என்று கூறுவதற்கு நேர்ந்தது. இத்துடன் இதை முடித்துக் கொண்டு, தேவிகுளம் - பீர்மேடு சம்பந்தப்பட்ட விவாதங்களுக்கு வருகிறேன். அனேகர் மலைகளைக் குறித்தும் நதிகளைக் குறித்தும் மற்றும் குடியேற்றங்களைக் குறித்தும் பேசுகிறார்கள். ஆனால் மக்களின் பிரச்சினைகளைக் குறித்து எவ்விடத்திலும் கருத்தில் கொண்டு பேசியதாகத் தோன்றவில்லை. பட்டம் தாணுப்பிள்ளை அரசின் இத்தகைய எதேச்சாதிக்காரக் கொள்கையாலேயே நாங்கள் 144 தடையை மீறினோம் என முன்பு குறிப்பிட்டேன். இதைத் தொடர்ந்து 20 பெண்கள் உட்பட 434 நபர்கள் கைதானார்கள். ஏனைனில் கெடுபிடியான பாதுகாப்பு நடவடிக்கைகளை அங்கு செய்யப்பட்டிருந்ததே அதற்குக் காரணம் ஆகும். தேவிகுளம், மூவாற்றுப்புழை மற்றும் ஏனையப் பகுதிகளிலிருந்து 60 மைல்களுக்கு அப்பால், ஆண்களுடன் 20 பெண்களையும் சேர்த்து ஒரே சிறையில் அடைத்திருந்த கொடுமையைக் குறித்து அறிவதற்கு அப்பெண்மணிகளை நீங்கள் நேரில் சன்று சந்தித்திருக்க வேண்டும். அங்கே அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதைக் குறித்து அறிந்து கொள்வதற்கு ஒரு நேர்முகப் பேட்டியை அவர்களுடன் நடத்தியிருக்க வேண்டும். தன்மானமும், பகுத்தறிவும் உள்ள எந்த மனிதனும் இவைகளுக்கு எதிராக ஒரு புரட்சியே செய்திருப்பான். இவைகள் பெரும் அதிர்ச்சியைத் தரக்கூடிய செயல்களாகும். 434 ஆண்களும், அவர்களுடன் 20 பெண்களும்சேர்த்து ஒரே சிறையிலடைக்கப்பட்ட போது இத்தகையச் செயல்களைத் தடுப்பதற்கு எங்களால் இயன்ற மடடுடூம் அரசுக்கு நெருக்குதல்களைத் தந்தோம்.
ஒரு உறுப்பினர் : அதை எவ்வாறு செய்தீர்கள்?
திரு.நேசமணி : ,
கேரளா ஐ.என்.டி.யு.சி. என்ற தொழிலாளர் அமைப்பும், தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி. என்ற தொழிலாளர் அமைப்பும் அங்கே செயல்பட்டு வருகின்றது. தென்னிந்திய தோட்டத் எதாழிலாளர் ஐக்கியம் என்ற அமைப்பு சென்னை ஐ.என்.டி.யு.சி.யுடன் இணைக்கப்பட்டுள்ளது. திரு-கொச்சி அரசும், கோட்டயம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியும் ஆதரவு அளித்து வருகின்ற தொழிலாளர்த்துறை மாண்புமிகு அமைச்சர் அன்று ஐ.என்.டி.யு.சி.சங்கத்தின் தலைவராக இருந்த வேளையில், கேரள ஹைரேஞ்சு தொழிலாளர் யூனியனை ஐ.என்.டி.யு.சி. அமைப்பிலிருந்து வெளியேற உத்தரவிட்டார். கோட்டயத்தைச் சார்ந்த சில செல்வந்தர்களும் மற்றும் சில உள்ளூர் முதலாளிகளுமே மேற்படி வெளியேற்றலுக்குத் துணை நின்றனர். தொழிலாளர் ஒற்றுமையைக் குலைப்பதில் ஆர்வம் காட்டி வந்தனர். ஐ.என்.டி.யு.சி. தலைவரின் வெளியேற்ற ஆணைக்குப் பிறகும், காளான்களைப் போன்று இந்த ஹைரேஞ்சு தொழிலாளர் யூனியன் அங்கும் இங்கும் ,தலைக்காட்டி வருகிறது.
மாலை 6 மணி
மாண்புமிகு துணை அவைத்தலைவர் :
சபை இன்னும் அரை மணி நேரம் கூடுதலாக அமரலாமா என்பதை
அறிய விரும்புகிறேன்.
பல உறுப்பினர்கள் : வேண்டாம்
மாண்புமிகு துணை அவைத்தலைவர் :
மதிப்பிற்கரிய உறுப்பினர் மேலும் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வார்?
திரு.நேசமணி :
தலைமை எவ்வளவு நேரம் அனுமதிக்கின்றதோ அவ்வளவு நேரம் வரையிலும், ஆனால் எனது வாதத்தை முழுமையாக எடுத்துரைக்க விரும்புகிறேன். இப்பிரச்சினை குறித்து, திருவிதாங்கூர் - கொச்சியிலிருந்து தமிழர்களுக்காக வாதாடுகின்ற ஒரே நபர் நான் மட்டுமேயாகும்.
மாண்புமிகு துணை அவைத்தலைவர் :
அப்படியானால் அங்கத்தினர் நாளையும் தொடரலாம் மக்களவை 1955 டிசம்பர் 15-ம் தேதி 11.00 மணிக்கு மீண்டும் கூடும் எனக்கூறி அவை ஒத்தி வைக்கப்படுகிறது
Comments
Post a Comment