செங்கோட்டை தாலுகா பறிபோனகதை
மூன்றாம் பேருரை 1956 - ஜுலைத் திங்கள் 26 –ம் தேதி திரு. நேசமணி : இந்திய அரசியல் தேசப்படத்தைத் திருத்தி அமைப்பதில் கூட்டுக் குழுவினர் சிறப்பு மிக்க பணியாற்றியுள்ளனர். ஆனால் எனது குற்றச்சாட்டுகள் யாதைனில், இவர்கள் ஏனைய மாநிலங்களின் எல்லைக்கோடுகளைத் திருத்தியமைக்கும் தருணங்களில் ஒரே சீரான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதேயாகும். குறிப்பிட்டுக் கூறுவதாயின், செங்கோட்டைத் தாலுகாவைக் குறித்து சிலவற்றை நான் கூறித்தான் ஆக வேண்டும். திருவிதாங்கூர் - கொச்சியைச் சார்ந்த இத்தாலுகாவைச் சென்னை மாநிலத்துடன் இணைத்து விடலாமைன்று பரிந்துரைக்கப்பட்டுள்து. திருவிதாங்கூர் - கொச்சியைச் சார்ந்த தமிழ்த் தாலுகாக்களின் தலைவிதியை நிர்ணயம் செய்கின்ற கூட்டுக் குழுவில், அப்பிரதேசங்களைச் சார்ந்த எவரையும் பிரதிநிதியாகச் சேர்த்துக் ககாள்ளாமல், ஒரு தலைபட்சமாக முடிவெடுத்திருப்பது துரதிஷ்டமானதே. எங்களுடன் கலந்து ஆலோசிக்காமலும், எங்களது அறிவுக்குக் கொண்டு வராமலும், திருவிதாங்கூர் - கொச்சி மாநிலம் மற்றும் சென்னை மாநிலங்களுக்கிடையே தன்னிச்சையாகச் செய்து கொண்ட ஒப்பந்தம் எங்கள் தலையின் மேல் கைவைப்பது போன்றதாகிவி...